ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
Saturday, March 16, 2013
அரசுத்தேர்வுகள் சுறுசுறுப்பாக நடத்து வருகின்றன.தேர்வுகள் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியான பிறகு புதிய பள்ளியிலேயோ, கல்லூரியிலோ அட்மிஷன் பெறுவதற்காக ஒரிஜினல் சான்றிதழ்களுடன் அலைவது வழக்கம்.அப்படி அலையும்போது ,இந்த அசல் சான்றிதழ்கள் தொலைந்தது விட்டால் எப்படி பெறுவது?
அதைப்பற்றி
தெரிந்து கொள்வோம் . பள்ளி,கல்லுரி மதிப்பெண்
பட்டியல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டால் , முதலில் போலீசில்
புகார் கொடுக்க வேண்டும். பின்னர்
நாளிதழில் விளம்பரம் கொடுக்க வேண்டும். அதன்
அடிப்படையில் தொலைந்தவற்றை கண்டு பிடிக்க முடியவில்லை
என்று போலீசாரிடம் சான்று பெற வேண்டும்.
படித்த
கல்வி நிறுவனத்துடன் அத்தாட்சியுடன் விண்ணப்பம் தயார் செய்து அதில்
தாசில்தாரிடம் சான்று பெற வேண்டும்.
அந்த சான்றுடன் ஒரு
விண்ணப்பம் மற்றும் நம்மிடம் ஜெராக்ஸ்
நகல்கள் இருந்ததால் அதை இணைத்து மாவட்ட
கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர்
ஆய்வு செய்து அதை தேர்வுத்துறை
இயக்குனருக்கு அனுப்பவார். இந்த விவரங்களை அரசிதழில்
வெளிடுவார். அதன் பின்னர் விண்ணப்பதாருக்கு சான்றிதழ்களின் டூப்ளிகேட் வழங்கப்படும்
இதுவே கல்லுரி சான்றிதழ்கள் என்றால்,
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் .
தொலைந்து
போன எஸ் .எஸ் .எல்.
சி சான்றிதழ்களை
பெற ரூ.105 ம் பிளஸ்-2
சான்றிதழ்களை பெற ரூ.505 ம்
கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பம்
செய்த நாள்களுக்குள் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் .


0 comments:
Post a Comment