இணைய வழி கோரிக்கை பதிவு

Monday, November 21, 2011

 இனி கலெக்டர் ஆபீஸ் சென்று கால் கடுக்க நின்று மனு கொடுக்கும்  நிலைமை மாறிவிட்டது. உங்களுக்காகவே ஆன்லைனில் மனு கொடுக்கும் நிலைமை வந்துவிட்டது

பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இரண்டற கலந்த ஒன்று. உண்மையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பொது மக்களின் குறை தீர்ப்பு என்பது ஒரு மாவட்ட நிர்வாகத்தின் திறமையான செயல்பாடுகளை அளந்து நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக கருதப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு பள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வும் எளிதாகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்கிறது. கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.

டாக்டர். சந்தோஷ் பாபு இ.ஆ.ப. முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 04.12.2006 அன்று ஆரம்பித்த இந்த மென்பொருள் மெருகூட்டப்பட்டு புதிய பரிமாணங்களுடன் மின்மாவட்ட நடைமுறையின் கீழ் அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது.


இணையதளம்

 
 இந்த இணையதளத்துக்கு சென்று அந்த விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .நடவடிக்கை நிலவரம் உங்களுக்கும் தெரிவிக்கப்படும் .காலதாமதமானால் உங்கள் விண்ணப்பத்தின் நிலையும் அறிய முடியும்.



விண்ணப்பத்தில் அம்புக்குறி இடப்பட்ட அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் .

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP