செல்போன் தொழில்நுட்பம் -3
Thursday, February 12, 2015
செல்போன்
வாங்கும் பொழுது முதலில் கவனிக்க
வேண்டியது ப்ராண்ட்(Brand) மற்றும் அதன் விலை(Price)
.சில பேர் பிராண்டுக்கு முக்கியத்துவம்
கொடுப்பார்கள் சில பேர் விலைக்கு
அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் இதில் நீங்கள் எந்த
வகை என்பதை உறுதி செய்துக்
கொள்ளுங்கள்.
இந்தியாவில்
ஸ்மார்ட் போன் விற்பனையில்
முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்
சாம்சங் -24%
மைக்ரோமக்ஸ்-20%
லாவா-8%
கார்பன்-8%
மோட்டோரோலா-5%
இதர நிறுவனங்கள் -35%
இதில் இதர நிறுவனங்கள் பட்டியலில்
பல முன்னணி நிறுவனங்களும் சில
சிறிய நிறுவனங்களும் சில சீன தயாரிப்புகளும்
அடங்கும்.
அடுத்ததாக
விலையை உறுதி செய்வது அதனை
போன் நில் உள்ள மூலம்
முடிவு செய்யலாம்ஸ்மார்ட்
போன் வாங்கும் பொழுது முதலில் General Features கவனிக்க
வேண்டும் அதை நீங்கள் கடைக்கோ
அல்லது ஷோ ரூம்க்கோ சென்று தெரிந்து கொள்ளலாம்.
செல்போன்
Package லியே அதனுடைய புகைப்படம் முதல்
பக்கத்திலும் General
Features இரண்டாவது பக்கத்திலும்
அச்சிடப்பட்டிருக்கும்.அவைகள்
மொபைலுக்கு மொபைல் மாறுபடலாம் கம்பெனிகள் சிலவற்றை
வித்தியாசப் படுத்தி காண்பித்து இருப்பார்கள்
அவற்றில்
முக்கியமான சில தகவல்கள்
Display பற்றிய தகவல்கள்
Processor
Camera
Network 2G or 3G
Pre Installed
Apps, Some Needed Technology
Sharing &
Connectivity
Battery
Android Os
Memory &
ROM & RAM
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் வாரங்களில் மிகத்
தெளிவாக தெரிந்துக் கொள்வோம்
அடுத்ததாக
அந்த Sale Package ல் என்ன என்ன
பொருள்கள் சேர்த்து வரும் என்பதை தெரிந்துக் கொள்ள
வேண்டும் ஏன் என்றால் நீங்கள்
வாங்கும் மொபைல் பிரபல கம்பெனியாக
இல்லை என்றால் அதற்கான Screen Guard கூட நீங்கள்
Retailer அல்லது Mobile Show Room ல் கூட
வாங்க முடியாது
Sales Package
ல் உள்ள முக்கியமான Accessories
Handset
Battery
Earphone
USB Cable
Flip Cover
Screen Guard
Warranty Card
User Manual
ஒரு சில மொபைல் போன்களுக்கு
Screen Guard அதன் கூட ஒட்டி
வருமே தவிர Extra ஓன்று வராது. சில
மாடல்களில் Head Phone வராது .சில மாடல்களில் Charger வரும் ,ஆனால் USB Cable வராது.
சில மாடல்களில் Flip Cover சேர்ந்தே
வரும். சில மொபைல்களில் இல்லாத Accessories களை நாம் தான்
Extra பணம் கொடுத்து வாங்க வேண்டி வரும்.
பணம் கொடுத்து வாங்க முடியாத மொபைல்
Accessories உள்ள Brand களைத் தவிர்க்கலாம்.

