செல்போன் தொழில்நுட்பம் -2

Wednesday, January 28, 2015


இப்ப இருக்கிற ஸ்மார்ட் போன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன்னால் போன் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பற்றி முதலில் தெரிந்துக் கொள்வோம்

முதல் தொலைபேசி அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பவரால் 7 மார்ச்1876 ம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டு, 10 மார்ச் 1876 ம் ஆண்டு சோதனை முயற்சியாக தன்னுடைய உதவியாளர் கூட முதலில் பேசினார் “Mr Watson,come here,I want to see you” என்பது தன முதல் தொலைபேசி உரையாடல்
.
முதல்  செல்போன் ஆனது ஜான் .F. மைக்கேல் மற்றும் DR மார்டின் கூப்பர் என்பவர்களால் மோட்டோரோலா( Motorola) கம்பெனியால் 1973ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1983ம் ஆண்டு மோட்டோரோலா ( Motorola)   கம்பெனியால் முதல் Commerical  போன் ஆக DynaTac 8000x என்ற மாடல் அறிமுகப் படுத்தப்பட்டது . அதன் எடை தோரயமாக 4.4 Poundsஅதாவது  2 கிலோ

1983ம் ஆண்டு செல்போன் அறிமுகப்படுத்தப் பட்டாலும் இந்தியாவில் 12 ஆண்டுகள் கழித்து தான்31 July 1995  முதல் செல்போன் மோட்டோரோலா  கம்பெனியால் அறிமுகப் படுத்தப்பட்டது. முதல் Network Service Provider ஆக Ankit Miglani ஆனது 1995 ம் ஆண்டு Moradabad(Delhi)யில் அறிமுகப் படுத்தப்பட்டது

அதே ஆண்டு இந்தியாவின் சுனில் பாரதி மிட்டல் என்பவரால் 7 July 1995 ல் Airtel என்ற  Service Provider நிறுவனம் தொடங்கப் பட்டது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு  Airtel நிறுவனம் செயல் படுகிறது

சுனில் பாரதி மிட்டல் என்பவர் பாரதி குழுமம் (Bhrati Group)என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை 1983 ம் ஆண்டு நிறுவி அதன் முதன் முதலில் நாம் இப்பொழுதும் பயன்படுத்தும் Push Button Type Model Telephone நை 1986 ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் . அதனால் தான் இந்தியாவில் முதலில் அவரால் செல்போன்  Network சேவையை தர முடிந்தது. இந்தியாவின் தற்பொழுது மிகப் பெரிய Service Provider Network ஆக “Airtel” விளங்குகிறது

குறிப்பு: அனைத்து தவல்களும் "Google" ஆண்டவர் உதவியுடன் மிகப் பெரிய தகவல் களஞ்சியமான "Wikipedia" மற்றும் இதர தளங்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ளது.

தவறோ அல்லது சந்தேகங்களோ இருந்தால் உடனே தெரியப்படுத்தவும். செல்போன் பற்றிய உங்கள் கேள்விகளை இதில் கேட்கவும்

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP