புத்தக விமர்சனம்
Thursday, May 28, 2015
புத்தக விமர்சனம்
நாட்டு கணக்கு
இவ்வளவுதான் எக்னாமிக்ஸ்
ஆசிரியர் : சோம
வள்ளியப்பன்
வெளியீடு: சிக்ஸ்த்
சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் :167
விலை :110
விமர்சனம்:
சொந்தக்
கணக்கையே பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள்
நாட்டின்
கணக்கையும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ள….
உங்கள் வீட்டின்
வரவு செலவு என்ன என்று உங்களுக்குத் தெரியும். நம் நாட்டின் வரவு செலவு கணக்குத் தெரியுமா?
அதைத் தெரிந்து என்ன செய்யப்போகிறோம் என்பவர்களுக்கான பதில்தான் சோம.வள்ளியப்பனின்
இந்நூல். நாம் கட்டுகிற வரி, நாட்டின் பொது செலவுக்கு யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்?
அதிலிருந்து நாம் எவ்வளவு பெறுகிறோம், எந்தவகையில் பயன்படும்? என்பதையெல்லாம் சொல்லி
இதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் என்று நமக்கு சொல்லித்தரும் நூல் இது. நம் நாட்டின்
நிதி சார்ந்த விஷயங்களை ஒரு பாமரனும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. அவ்வளவு எளிமை.
அவ்வளவு உதாரணங்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

