செல்போன் தொழில்நுட்பம் -5

Saturday, February 28, 2015


ஸ்மார்ட் போன் வாங்கும் பொது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
அடுத்ததாக கவனிக்க வேண்டிய அம்சம்  .செல்போனின் Touch Screen .

Touch Screen ஆனது பல்வேறு வகைகளில் உள்ளன
அவைகள்
1.Resistive Touch Screen
இந்த வகை Touch Screen ஆனது அதிக அழுத்தம் கொடுத்து உபயோகப் படுத்தப்பட வேண்டும். அல்லது நகத்தைக் கொண்டு அதிக அழுத்தம் கொடுத்து உபயோகிக்க வேண்டும் .இந்த Touch Screen கள் தான் குறைந்த விலை China Mobile களில் பயன்படுத்தப்  படுகின்றன
2.Capactive Touch Screen
இந்த வகை  Touch Screen ஆனது விரலை வைத்து மெதுவாகத் தொட்டாலும் போதும் அவைகள் உபயோகத்திற்கு தயாராகி விடும். இந்த வகை Touch Screen க்கு அதிக அழுத்தம் கொடுக்க தேவையில்லை. இந்த வகை Touch Screen கள் தான் Branded Mobile களில் பயன்படுத்தப் படுகின்றன
3.Acoustic (Surface Acoustic Wave)
4.Infrared Touch Screen
இந்த முதல் இரண்டு வகை Touch Screen கள் தான் செல்போன்களில் உபயோகப் படுத்தப் படுகின்றன.
நீங்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்திருப்பீர்கள் ஆனால் மற்ற இரண்டு Touch Screen ணும் செய்திகளில் உபயோகப் படுத்தப் படுகின்றன.

அடுத்ததாக நீங்கள் வாங்கும் மொபைலில் உள்ள  Touch Screen ஆனது Multi Touch Screen  ஆக இருப்பது அவசியம். Multi Touch  என்பது ஒரே  நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விரல்களை உபயோகப் படுத்தி Touch Screen னைப்  பயன் படுத்த முடியும். இப்பொழுது சில மாடல்களில் Touch Screen  ஆனது 5 Finger உபயோகப் படுத்தும் வகையிலும், சில மாடல்களில் Touch Screen  ஆனது 10 Finger உபயோகப் படுத்தும் வகையிலும் கிடைகின்றன. நீங்கள் வாங்கும் மொபைல் இதில் எந்த வகை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை Play Store  ல் உள்ள Android App மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தது கவனிக்க வேண்டிய அம்சம் Sim Card Type. இப்பொழுது வரும் அனைத்து மொபைல்களும் இரண்டு சிம் கார்டுகள் பயன் படுத்தும் வசதியுடன் வருகின்றன. வெளிநாடுகளிலேயோ அல்லது பழைய மாடல்களிலேயோ ஒரு சிம் கார்டு கொண்ட செல்போன்கள் விற்பனையில் உள்ளன. எனவே மொபைல் தேர்தெடுக்கும் பொழுது இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிம் கார்டுகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன
Sim Card Types(SIM-Subscriber Identity Module)
Sim Card          Introduced     Length(mm)    Width(mm)
Full Size(1FF)         1991          85.60        53.98
Mini-Sim(2FF)         1996           25           15
Micro-Sim(3FF)        2003           15           12
Nano-Sim(4FF)     Early 2012         12.30         8.30
FF –Form Factor
சிம் கார்டுகளில் 32KB  இருந்து 128 KB வரை  Stroage செய்யும் வசதிக் கொண்ட சிம் கார்டுகள் கிடைக்கின்றன. இப்பொழுது கிடைக்கும் சிம் கார்டுகளில் 250 நம்பர்களும் 50 SMS களையும் Store செய்யும் விதமாகவே கிடைகின்றன.

அடுத்தது உங்கள் சிம் கார்டை அடுத்தவர்கள் பயன்டுத்த முடியாதபடி PIN Number(Personal Identification Number) ரைக் கொண்டு Lock செய்யலாம். இந்த PIN Number ரை மூன்று தடவைகள் தவறாக பதிவு பண்ணினால் உங்கள் Sim Card Lock ஆகி விடும். அதனை Customer Care  மூலம் கிடைக்கும் PUK Code (Personal Unblocking Code) கொண்டு சரி செய்யலாம். இந்த PUK Code டையும் பத்து தடவை தவறாக பதிவு செய்யலாம் அதற்கு மேல் என்றால் சிம் கார்டு பயன்படுத்த முடியாத படி Lock ஆகிவிடும்.


இந்த சிம்கார்டு PIN Lock யை உங்கள் மொபைல் Phone Seyttings மூலம் Control செய்யலாம்

Read more...

செல்போன் தொழில்நுட்பம் -4

Saturday, February 21, 2015


ஸ்மார்ட் போன் வாங்கும் பொது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

முதலில் செல்போனின் விலை மற்றும் பிராண்டை முடிவு செய்த பின் செல்போன் ஆனது எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதனை Display Size  சை வைத்து முடிவு செய்யலாம். குறைந்தது   4 “ inch என்ற அளவில் இருந்து 6 “inch என்ற அளவில் Display Size இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்

இப்பொழுது அனைத்து மாடல் செல்போன்களும் 5”inch Display  என்ற அளவில் Focus செய்து விற்பனை செய்து வருகின்றன.5”inch  என்ற அளவு போதுமானதாக இருக்கும் என்பது எனது கருத்து.

5”inch Display ஆனது 12.7 cm அளவு நீளத்தை எடுத்துக் கொண்டு விடும்

அடுத்தது செல்போனின் தடிமன், இப்பொழுது OPPO R5 என்ற மாடல் 4.85 mm என்ற அளவில் VIVO MAX 5 என்ற மாடல் 4.75mm என்ற அளவிலும் கிடைக்கின்றன. தடிமனானது 7mm என்ற அளவில் இருந்து   9mm என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

அடுத்ததாக போனின் எடை, முதல் போனானது 2 கிலோ இருந்தது என்று பார்த்தோம் எனவே செல்போன் ஆனது 125 கிராம் என்ற அளவிலிருந்து 200 கிராம் என்ற அளவில் இருக்குமாறு வாங்க வேண்டும்

Display ஆனது HD Quality என்ற அளவில் இருக்க வேண்டும்

Display ஆனது கிழவரும் பெல்வேறு நிலைகளில் உள்ளது எனவே அதனைப் பற்றியும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
Display Types
TFT LCD (Thin Flim Transistor Liquid Crystal Display)
IPS LCD (In Palne Switching)
SLCD (SuperLCD)
OLED (Oraganic Lighting Emiting Diode)
AMOLED(Active Matrix Oraganic Lighting Emiting Diode)
Super AMOLED Display
Retina Display

HD Resolutions

720P  
720*1280
768*1280        ~280 to 320 Pixels
800*1280

1080 P
1080*1920      ~340 to ~440 Pixels

1440 P
2560*1440      ~490 to ~570 Pixels

High Definitons:
Name            xP(x)  yP(x)    X:Y
nHD              640       360      16:9
qHD              960       540      16:9
HD                1280     720      16:9
HD+              1600      900     16:9
FHD              1920     1080    16:9
QHD              2560    1440    16:9
WQXGA+     3200    1800    16:9
UHD (4K)      3840    2160    16:9
UHD+(5K)     5120    2880    16:9
FUHD (6K)    7680     4320   16:9
QUHD (8K)    15360   8640  16:9

இந்த Display ன் பல்வேறு படிநிலையானது அவைகள் எவ்வாறு ஒளியை  உமிழ்கின்றன மற்றும் எவ்வளவு அளவு கலர்களை உமிழ்கின்றன எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன என்பதை பொறுத்து வகைப்படுத்தப் பட்டுள்ளன அதில் எவ்வளவு தெளிவாக படங்கள் தெரிகின்றன என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன  

அடுத்தது Display யில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் Color Depth ஆகும். பொதுவாக இப்பொழுது வருகின்ற அனைத்து செல்போன்களுமே 16 M Colors Support செய்யும் விதமாகவே வருகின்றன .

Color Depth எனப்படுவது ஒரு படத்திலுள்ள Pixel கள் எத்தனை Color களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன என்பதை குறிப்பதாகும்.
1பிட்= இரண்டு வர்ணங்கள்
2பிட்= நான்கு வர்ணங்கள்
4பிட்= பதினாறு வர்ணங்கள்
8பிட்=256 வர்ணங்கள்
24பிட்= 16 பில்லியன் வர்ணங்கள்





Read more...

செல்போன் தொழில்நுட்பம் -3

Thursday, February 12, 2015


செல்போன் வாங்கும் பொழுது முதலில் கவனிக்க வேண்டியது ப்ராண்ட்(Brand) மற்றும் அதன் விலை(Price) .சில பேர் பிராண்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் சில பேர் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் இதில் நீங்கள் எந்த வகை என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் ஸ்மார்ட் போன்  விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்
சாம்சங் -24%
மைக்ரோமக்ஸ்-20%
லாவா-8%
கார்பன்-8%
மோட்டோரோலா-5%
இதர நிறுவனங்கள் -35%
இதில் இதர நிறுவனங்கள் பட்டியலில் பல முன்னணி நிறுவனங்களும் சில சிறிய நிறுவனங்களும் சில சீன தயாரிப்புகளும் அடங்கும்.

அடுத்ததாக விலையை உறுதி செய்வது அதனை போன் நில் உள்ள மூலம் முடிவு செய்யலாம்ஸ்மார்ட் போன் வாங்கும் பொழுது முதலில் General Features  கவனிக்க வேண்டும் அதை நீங்கள் கடைக்கோ அல்லது ஷோ ரூம்க்கோ  சென்று தெரிந்து கொள்ளலாம்.

செல்போன் Package லியே அதனுடைய புகைப்படம் முதல் பக்கத்திலும் General Features இரண்டாவது  பக்கத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.அவைகள் மொபைலுக்கு மொபைல் மாறுபடலாம் கம்பெனிகள்  சிலவற்றை வித்தியாசப் படுத்தி காண்பித்து இருப்பார்கள்
அவற்றில் முக்கியமான சில தகவல்கள்
Display  பற்றிய தகவல்கள்
Processor
Camera
Network 2G or 3G
Pre Installed Apps, Some Needed Technology
Sharing & Connectivity
Battery
Android Os
Memory & ROM & RAM
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் வாரங்களில் மிகத் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்

அடுத்ததாக அந்த Sale Package ல் என்ன என்ன பொருள்கள் சேர்த்து வரும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் ஏன் என்றால் நீங்கள்  வாங்கும் மொபைல் பிரபல கம்பெனியாக இல்லை என்றால் அதற்கான Screen Guard கூட நீங்கள் Retailer அல்லது  Mobile Show Room ல் கூட வாங்க முடியாது

Sales Package ல் உள்ள முக்கியமான Accessories
Handset
Battery
Earphone
USB Cable
Flip Cover
Screen Guard
Warranty Card
User Manual

ஒரு சில மொபைல் போன்களுக்கு Screen Guard அதன் கூட ஒட்டி வருமே தவிர Extra ஓன்று வராது. சில மாடல்களில் Head Phone  வராது .சில மாடல்களில் Charger வரும் ,ஆனால் USB Cable வராது. சில மாடல்களில் Flip Cover  சேர்ந்தே வரும். சில மொபைல்களில் இல்லாத Accessories களை நாம் தான் Extra பணம் கொடுத்து வாங்க வேண்டி வரும். பணம் கொடுத்து வாங்க முடியாத மொபைல் Accessories  உள்ள Brand களைத் தவிர்க்கலாம்.

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP