உங்களுக்கென்று ஒரு இணையதளம்

Saturday, July 25, 2015


உலகம், இணையத்தை இதயமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் காலம் இது. தகவல் பரிமாற்றங்களும், வர்த்தகப் பரிமாற்றங்களும் இணைய தளங்களின் வழியே படுஜோராக நடைபெறுகிறது எதிகாலத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி இணையதளம் இருக்கும் என்றால் வியப்பில்லை. ஆமாம், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரது இணையதளத்திருக்கு செல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது .

தொழில் துறைக்கு இணையதளக்கள் பெரிதும் உதவுகின்றன. நிறுவனங்கள், கடைகள் தங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கின்றன. உங்களுக்கும், சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்கும் ஆசை இருக்கலாம் அல்லது நீங்கள் செய்யும் தொழில் அல்லது சேவை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தை வடிவமைக்கும் எண்ணம் இருக்கலாம்.

இணையதளங்களில் இணையம் உருவாக்கித் தருபவர்களின் விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன. அவர்களைப் பயன்படுத்தி நமக்கென்று ஒரு இணையத்தை உருவாக்குவது என்பது மிகவும் எளிது.
உங்களுக்குத் தேவையான அளவு வசதிகளை உருவாக்கவும், நிறைய பக்கங்களை(Web Page) பயன்படுத்தப்படும். அதற்கேற்ப உங்களிடம் கட்டணம் வசூலிப்பார்கள்.

உதாரணமாக நீங்கள் ஒரு எழுத்தாளர்,உங்கள் புத்தகங்களை வெளிவிட சொந்தாமாக ஒரு இணையத்தை உருவாக்குகிறீர்கள் என்றால் குறைந்த அளவிலான பக்கங்களை கொண்ட இணையத்தை எளிதாக உருவாக்கிடலாம்.அனால் நீங்கள் ஒரு பதிப்பகம் நடத்த விரும்பி இணையதளம் வடிவமைத்தால், நீங்கள் வெளியிடும் புத்தகங்களை துறைகள் வாரியாகவும், எழுத்தாளர்கள் வாரியாகவும், விலை வரிசையிலும், கால வரிசையிலும் அட்டவணைப்படுத்தி வெளியிடும்படி வசதிகள் செய்ய விரும்பினால் அதற்கேற்ப மெனுக்களும், பட்டன்களும் அதிகம் இடம் பெறும். இப்படி வடிவமைக்க நிறைய செலவு பிடிக்கும் .

அனைத்து விதமான இணையதளக்களுக்கும் சில அமைப்புகள் பொதுவாக இருக்கும். அவற்றில் முதன்மையானது ஹோம் பேஜ் எனப்படும் முகப்பு பக்கம். நமது இணையதள முகவரியை வெப் பிரவுசரின் முகவரிப் பெட்டியில் தட்டச்சு செய்ததும், முதலில் தோன்றுவது நமது தளத்தின் முகப்பு பக்கம் தான்.எனவே முகப்பு பக்கம் உருவாக்குவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகப்புப் பக்கமானது பளிச்சென்றும், நமது தளம், எதற்கான தளம்? என்பதை சில வினாடிகளில் விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய புதிய அறிமுகங்களை முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும்.

இதேபோல் அபவுட் அஸ், காண்டக்ட் அஸ் ஆகிய பக்கங்களும் இணையதளங்களில் பிகப் பொதுவானவையாகும். இதில் நிறுவத்தின் முகவரி, தொடர்பு எண், மெயில் .டி. உள்ளிட்ட விவரங்கள் இடம் பெரும்.

பொதுவான பக்கங்கள் தவிர, நமக்குத் தேவியான வசதிகளை இணையதளத்தில் கொண்டு வர வடிவமைப்பாளர்களிடம் நன்கு விளக்க வேண்டும். பொருளை விருக்கும் இணையதளம் என்றால்புராடக்ட் என்ற பட்டனை உருவாக்கலாம். இதுபோல் நமக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கும்படி வடிவமைப்பாளர்களிடம்  விளக்குவது நமது கடமையாகும்.

நமது இணையதளத்திற்கான முகவரியை உருவாக்கும் வாய்ப்பு நம்முடையதுதான். அதாவது WWW. என்பதற்கும் அடுத்து நாம் விரும்பும் பெயரை இணையதளத்திகு சூட்டிக் கொள்ளலாம். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான பெயராக இருந்ததால், வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பெயர் சூட்ட வேண்டும்.இணையப் பெயரில் பின் சேர்க்கையாக இடம் பெறும் .com, .in, .org, .net, .co.in ஆகியவை கட்டணதிற்கேற்ப வழங்கப்படும்

இணையதளம் வடிவமைத்த பிறகு  நாம் வெளியிட விரும்பும் விவரங்களை காலம் தவறாமல் வெளியிடுவது வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செயும் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையென்றால் உதவியாளர் வைத்துக் கொள்வது நல்லது. இணையம் வாங்கிய பிறகு, அதனை ஆண்டு தோறும் இணையத்தில் நிலைக்கச் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கி, சேவையால் உங்களையும், உலகையும் உயர்த்தலாம்.

உங்களுக்கு என்று  ஒரு இணையதளம் உருவாக்க தொடர்பு கொள்ளவும்

Ganesan Arangulavan  --- Tamil Magan Studio --- 9543282755, 9787 813 817



Read more...

புத்தக விமர்சனம்

Thursday, May 28, 2015

புத்தக விமர்சனம்


நாட்டு கணக்கு இவ்வளவுதான் எக்னாமிக்ஸ்

ஆசிரியர் : சோம வள்ளியப்பன்

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள் :167

விலை :110

விமர்சனம்:
சொந்தக் கணக்கையே பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள்
நாட்டின் கணக்கையும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ள….

உங்கள் வீட்டின் வரவு செலவு என்ன என்று உங்களுக்குத் தெரியும். நம் நாட்டின் வரவு செலவு கணக்குத் தெரியுமா? அதைத் தெரிந்து என்ன செய்யப்போகிறோம் என்பவர்களுக்கான பதில்தான் சோம.வள்ளியப்பனின் இந்நூல். நாம் கட்டுகிற வரி, நாட்டின் பொது செலவுக்கு யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்? அதிலிருந்து நாம் எவ்வளவு பெறுகிறோம், எந்தவகையில் பயன்படும்? என்பதையெல்லாம் சொல்லி இதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் என்று நமக்கு சொல்லித்தரும் நூல் இது. நம் நாட்டின் நிதி சார்ந்த விஷயங்களை ஒரு பாமரனும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. அவ்வளவு எளிமை. அவ்வளவு உதாரணங்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



Read more...

செல்போன் தொழில்நுட்பம் -5

Saturday, February 28, 2015


ஸ்மார்ட் போன் வாங்கும் பொது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
அடுத்ததாக கவனிக்க வேண்டிய அம்சம்  .செல்போனின் Touch Screen .

Touch Screen ஆனது பல்வேறு வகைகளில் உள்ளன
அவைகள்
1.Resistive Touch Screen
இந்த வகை Touch Screen ஆனது அதிக அழுத்தம் கொடுத்து உபயோகப் படுத்தப்பட வேண்டும். அல்லது நகத்தைக் கொண்டு அதிக அழுத்தம் கொடுத்து உபயோகிக்க வேண்டும் .இந்த Touch Screen கள் தான் குறைந்த விலை China Mobile களில் பயன்படுத்தப்  படுகின்றன
2.Capactive Touch Screen
இந்த வகை  Touch Screen ஆனது விரலை வைத்து மெதுவாகத் தொட்டாலும் போதும் அவைகள் உபயோகத்திற்கு தயாராகி விடும். இந்த வகை Touch Screen க்கு அதிக அழுத்தம் கொடுக்க தேவையில்லை. இந்த வகை Touch Screen கள் தான் Branded Mobile களில் பயன்படுத்தப் படுகின்றன
3.Acoustic (Surface Acoustic Wave)
4.Infrared Touch Screen
இந்த முதல் இரண்டு வகை Touch Screen கள் தான் செல்போன்களில் உபயோகப் படுத்தப் படுகின்றன.
நீங்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்திருப்பீர்கள் ஆனால் மற்ற இரண்டு Touch Screen ணும் செய்திகளில் உபயோகப் படுத்தப் படுகின்றன.

அடுத்ததாக நீங்கள் வாங்கும் மொபைலில் உள்ள  Touch Screen ஆனது Multi Touch Screen  ஆக இருப்பது அவசியம். Multi Touch  என்பது ஒரே  நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விரல்களை உபயோகப் படுத்தி Touch Screen னைப்  பயன் படுத்த முடியும். இப்பொழுது சில மாடல்களில் Touch Screen  ஆனது 5 Finger உபயோகப் படுத்தும் வகையிலும், சில மாடல்களில் Touch Screen  ஆனது 10 Finger உபயோகப் படுத்தும் வகையிலும் கிடைகின்றன. நீங்கள் வாங்கும் மொபைல் இதில் எந்த வகை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை Play Store  ல் உள்ள Android App மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தது கவனிக்க வேண்டிய அம்சம் Sim Card Type. இப்பொழுது வரும் அனைத்து மொபைல்களும் இரண்டு சிம் கார்டுகள் பயன் படுத்தும் வசதியுடன் வருகின்றன. வெளிநாடுகளிலேயோ அல்லது பழைய மாடல்களிலேயோ ஒரு சிம் கார்டு கொண்ட செல்போன்கள் விற்பனையில் உள்ளன. எனவே மொபைல் தேர்தெடுக்கும் பொழுது இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிம் கார்டுகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன
Sim Card Types(SIM-Subscriber Identity Module)
Sim Card          Introduced     Length(mm)    Width(mm)
Full Size(1FF)         1991          85.60        53.98
Mini-Sim(2FF)         1996           25           15
Micro-Sim(3FF)        2003           15           12
Nano-Sim(4FF)     Early 2012         12.30         8.30
FF –Form Factor
சிம் கார்டுகளில் 32KB  இருந்து 128 KB வரை  Stroage செய்யும் வசதிக் கொண்ட சிம் கார்டுகள் கிடைக்கின்றன. இப்பொழுது கிடைக்கும் சிம் கார்டுகளில் 250 நம்பர்களும் 50 SMS களையும் Store செய்யும் விதமாகவே கிடைகின்றன.

அடுத்தது உங்கள் சிம் கார்டை அடுத்தவர்கள் பயன்டுத்த முடியாதபடி PIN Number(Personal Identification Number) ரைக் கொண்டு Lock செய்யலாம். இந்த PIN Number ரை மூன்று தடவைகள் தவறாக பதிவு பண்ணினால் உங்கள் Sim Card Lock ஆகி விடும். அதனை Customer Care  மூலம் கிடைக்கும் PUK Code (Personal Unblocking Code) கொண்டு சரி செய்யலாம். இந்த PUK Code டையும் பத்து தடவை தவறாக பதிவு செய்யலாம் அதற்கு மேல் என்றால் சிம் கார்டு பயன்படுத்த முடியாத படி Lock ஆகிவிடும்.


இந்த சிம்கார்டு PIN Lock யை உங்கள் மொபைல் Phone Seyttings மூலம் Control செய்யலாம்

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP