இணையதளம் - இணையவழி பி.டி.எப். மாற்றி

Saturday, April 14, 2012

நாம் தயாரிக்கும் ஆவணங்களை பி.டி.எப். பைல்களாக மாற்றி வைத்துக் கொள்ளுதல் பல வகைகளில் நமக்கு நன்மை தரக் கூடியது. ஆனால் இவற்றை மாற்றிட ஏதுவான சாப்ட்வேர் அப்ளி கேஷன் நமக்கு தேவை. எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பில் இதற்கான வசதி தரப் பட்டுள்ளது. பைல்களை உருவாக்கி சேவ் செய்த பின்னர், கூடுதலாக அவற்றை பி.டி.எப். பைலாகவும் சேவ் செய்திடலாம். ஆனால் எல்லாரிடமும் இந்த தொகுப்பு கம்ப்யூட்டரில் இருக்கும் என்று சொல்ல இயலாது. மேலும் இதனை எப்படி மாற்றுவது என அறியாதவர்களும் பலர் உள்ளனர்.

இணையத்தில் பல தளங்களில் இந்த சேவையினை வழங்கும் தளங்களும் இருக்கின்றன. அவற்றில் மிகச் சிறந்ததாக அண்மையில் ஒரு தளத்தினைப் பார்க்க நேர்ந்தது. இதனைப் பயன்படுத்திப் பார்க்கையில், இதன் செயல் திறனும் வேகமும் நம் நேரத்தையும், சாப்ட்வேர் தேவையையும் மிச்சப்படுத்துகின்றன.



DocPdf converter என்ற இந்த சாதனம், http://www.doc-pdf.net/ என்ற முகவரியில் கிடைக்கிறது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் பைல்களை பி.டி.எப். பைல்களாக மாற்றலாம். வேர்ட் டாகுமெண்ட் மட்டுமின்றி, எக்ஸெல், பவர்பாய்ண்ட் பைல்களையும் மாற்றலாம். இதன் சிறப்பான வசதிகள் பின்வருமாறு:

1. doc/docx பைல்களை, அவை எந்த அளவில் இருந்தாலும், சிரமமின்றி இதில் மாற்றலாம். டாகுமெண்ட்டின் தன்மை மாறாது. கம்ப்யூட்டரில், பிளாஷ் மெமரி கார்டுகளில் எளிதாக ஸ்டோர் செய்திட லாம்.

2. xls/xlsx பைல்களையும் பி.டி.எப். பைல் களாக மாற்றலாம். இதில் எவ்வளவு பெரிய டேபிள்கள் இருந்தாலும், அவற்றின் தன்மை மாறாமல் மாற்றப்படுகின்றன.

3. odt/ods பைல்களையும் மாற்றலாம். டெக்ஸ்ட் டாகுமெண்ட், பிரசன்டேஷன் பைல்கள், வரைபடங்கள், டேபிள்கள், போட்டோக்கள் ஆகிய அனைத்தும் எந்த பிரச்னையும் இன்றி தெளிவாகக் கிடைக்கின்றன.
மேலும் ஒரே பி.டி.எப். பைல்களில் அனைத்தையும் மாற்றி வைத்திடும் வசதியும் இதில் உள்ளது.

Read more...

புதுப்பொலிவுடன் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம்: ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்

Sunday, March 25, 2012

சென்னை, மார்ச் 24: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) இணையதளத்தை புதிய பொலிவுடன் கொண்டு வருவதற்கான இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.


இந்த நிலையில், மருந்துகள் ஆய்வாளர் உள்பட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுயாட்சி பெற்ற ஆணையமான அது, 1929-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இணையதளம்: ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தமக்கென தனியாக இணையதளத்தை வைத்துள்ளன. அந்த இணையதளங்கள் ஏதாவது ஒரு வகையில் தேர்வர்களுக்கு பயனுள்ள வகையில் இருந்து வருகின்றன.

ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் எந்தவொரு தகவலும் இல்லாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இப்போது, இதை மாற்றும் முயற்சியில் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதல் கட்டமாக, இணையதளத்தில் தேர்வுகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, ஆன்-லைன் மூலமாகவே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருந்துகள் ஆய்வாளர் உள்பட மூன்று தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ஆன்-லைன் விண்ணப்பம்:

பொதுவாக, மத்திய அரசு அல்லது பிற அரசுத் துறைகள் நடத்தும் தேர்வுகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆனால், ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ள முறையில் தமிழ்-ஆங்கிலம் என இரண்டு மொழிகளும் இடம்பெற்றுள்ளது. தமிழில் இருப்பதால் கிராமப்புறத்தில் உள்ளவர்களும் எளிதாகப் படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். இப்போது சிறிய அளவிலான தேர்வுகள் ஆன்-லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோன்று, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளையும் ஆன்-லைனிலேயே நடத்தினால் விண்ணப்பிக்கும் முறைகள் எளிதாகும் என தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Read more...

பிளாக் மேஜிக்-வண்ணம் மாற்ற

Sunday, February 19, 2012

"பிளாக் மேஜிக்' சாப்ட்வேர் விண்டோஸ் இயக்கத்தில் வண்ணம் மாற்றும் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டது. கருப்பு வெள்ளை படங்களை வண்ணத்தில் கொண்டு செல்வது மட்டுமின்றி, வண்ணப் படங்களையும் கருப்பு வெள்ளையில் மாற்றித் தருகிறது. போட்டோ எடிட் செய்வதற்கு நிறைய பாடங்களை எல்லாம் இதில் படிக்க வேண்டியதில்லை. இந்த சாப்ட்வேர் தொகுப்பில் “Timebrush” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பெற http://www.blackandwhitetocolor.com/html/blackmagic.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத் திற்குச் செல்லவும்.

Download BlackMagic என்ற லிங்க்கில் கிளிக் செய்து இதனை தரவிறக்கம் செய்திடலாம். இதன் இயக்க பைல் இறங்கியவுடன், இதனை இன்ஸ்டால் செய்திட ஒரு ஐகான் கிடைக்கும். blackmagic.exe என்ற இதன் பைலில் கிளிக் செய்தால், புரோகிராம் பதியப்படும். நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துவதாக இருந்தால், இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Run as administrator என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டால் செய்த பின்னர், புரோகிராமினை இயக்கவும்.

கிடைக்கும் மெனுவில், Load Image என்ற பட்டனில் கிளிக் செய்தால், வண்ணம் மாற்ற வேண்டிய படத்தை இமேஜ் எடிட்டரில் திறந்து வண்ணம் மாற்றும் வேலையைத் தொடங்கலாம். எந்த எந்த பகுதியில், என்ன வண்ணம் அமைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்க எளிதான மெனு தரப்படும். படத்திற்கான வண்ணம் மட்டுமின்றி, பின்புலத்தில் இருக்க வேண்டிய வண்ணத்தினையும் அமைக்கலாம்.

நீங்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், பிளாக் மேஜிக், என்ன மாதிரியான படத்தில் வண்ணங்கள் மாற்றப்படுகின்றன என்பதனை உணர்ந்து, உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கும். இறுதியாக அனைத்து வண்ணங்களும் உங்களுக்கு நிறைவாகத் தோன்றினால், அந்த படத்தினை புதிய பெயரில் சேவ் செய்துவிடலாம். இவை அனைத்தையும் மேற்கொள்ள ஒரு சில நிமிடங்களே ஆகின்றன என்பது இதன் சிறப்பு.

Read more...

எம்.எஸ் ஆபீஸ் ட்யூனிங்

Monday, January 30, 2012

உங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எளிதாகவும் விரைவாகவும் இயங்கிக் கொண்டிருக் கலாம். ஆனால், அதில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பினால், பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் இயத்தின் வேகத்தினை மட்டுப்படுத்தலாம். அது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பல வழிகள் உள்ளன. இங்கு சில காட்டப் பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு டிப்ஸ் தரப்படுகிறது.

1. வேர்டின் மாறா எழுத்துருவை மாற்றுக: கலிப்ரி (Calibri) என்ற எழுத்துவகை 11 என்ற அளவில் மாறா நிலையில் உள்ளதா? நார்மல் டெம்ப்ளேட்டினை மாற்றுவதன் மூலம் இதனை மாற்றலாம். Home டேப்பில், Styles என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Normal என்னும் பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் மூலம் விருப்பப்படும் எழுத்துருவினையும், அதற்கான பார்மட்டிங் கூறுகளையும் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் New Documents based on this Template என்று இருப்பதில் கிளிக் செய்து பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சில பிரச்னைகளைச் சந்திப்பது தீர்க்கப்படும்.


2.எக்ஸெல்-ஆட்டோமேடிக் கால்குலேஷன் நிறுத்துக: உங்களுடைய ஒர்க்புக் மிகவும் அதிகமான பார்முலாக்கள், கணக்கீடுகள் நிறைந்தனவாக உள்ளதா? ஒரு எண்ணை மாற்றினால், எக்ஸெல் தானாகவே நூற்றுக்கணக்கான கணக்குகளில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், தானாகக் கணக்கிடும் செயல்முறையினை நிறுத்தி வைக்கலாமே! இதற்கு Options டயலாக் பாக்ஸ் செல்ல வேண்டும். இதற்கு File டேப் சென்று, பின்னர், இடது பிரிவில் Options தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், அதன் இடது பிரிவில் Formulas தேர்ந்தெடுக்கவும். ஒர்க்புக் கால்குலேஷன்களுக்கு Manual என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பைலை சேவ் செய்யாத வரையில் அல்லது எப்9 அழுத்தாத வரை இந்த எண்கள் சரியாக இருக்காது.


3. பவர்பாய்ண்ட் ஏன் திறக்கப்படவில்லை? நீங்கள் பாடுபட்டு தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலை, ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிவு செய்து, இன்னொரு இடத்தில், மற்றொரு கம்ப்யூட்டரில் மாற்றி, டபுள் கிளிக் செய்து இயக்குகிறீர்கள். அது இயங்க மறுக்கிறது. ஏன்? பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, நீங்கள் தயாரித்த பிரசன்டேஷன் பைல் .pptx என்ற வகையில் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதனைத் திறக்க முயற்சிப்பதோ, ஆபீஸ் தொகுப்பின் பழைய பதிப்பாக இருக்கலாம். இது போன்ற பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலை பழைய ஆபீஸ் பார்மட்டிலேயே (.ppt) சேவ் செய்து வைக்கலாம். புதிய ஆபீஸ் தொகுப்பு களில், (ஆபீஸ் 2007, 2010) இதற்கான வசதி உள்ளது.

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP