போட்டோக்களின் அளவுகளை மாற்ற,பைல்களின் பார்மட்களை மாற்ற

Sunday, November 27, 2011

டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது.

அதன் பெயர் Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம். இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போட்டோக்களில் ஓரளவிற்கு எடிட்டிங் வேலையையும் மேற்கொள்ளலாம்; சுழற்றி வைக்கலாம்.

மேலே குறிப்பிட்ட தளம் சென்றவுடன், அந்த இணையப் பக்கத்தில், கீழாக
Fast Stone Photo Resizer இருப்பதனைக் காணலாம். இதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளவும். டவுண்லோட் செய்தவுடன், டெஸ்க்டாப் திரையில் ஒரு ஐகான் காணப்படும். இதன் மீது கிளிக் செய்து, இந்த அப்ளிகேஷனைத் திறக்கவும். முகப்புப் பக்கத்திலேயே, நீங்கள் மாற்றம் மேற்கொள்ள விரும்பும் போட்டோ பைல்களைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Add பட்டன் கிளிக் செய்தால் போதும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், அடுத்து இந்த படங்களில் என்ன மாற்றம் செய்திட விரும்புகிறீர்கள் என்று காட்ட வேண்டும். போட்டோக்களின் அளவினை மாற்ற விரும்பினால், Advanced Options பட்டன் கிளிக் செய்து, 
Resize பாக்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மேலாக இடது புறம் காணப்படும். இதில் Standard Size என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் அளவைக் குறிப்பிடலாம். அளவு குறித்த தேர்வை அமைத்த பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்திடலாம். அடுத்து, எந்த போல்டரில் அளவு மாற்றப்பட்ட படங்கள் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனைக் காட்டவேண்டும்.
மீண்டும் Browse Click செய்தால் Browse For Folder என்ற விண்டோ திறக்கப்படும். இதில் போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும், குறிப்பிட்ட அளவில் மாற்றப்பட்டு Save செய்யப்படும். இதே போல மொத்தமாகவும் பார்மட் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

இந்த சாப்ட்வேர் புரோகிராமினைச் சோதனை செய்வதற்காக, 106 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து அளவை மாற்றினேன். முதலில் இவற்றிற்கு 250 எம்பி இடம் தேவைப்பட்டது. அளவு மாற்றியவுடன் இவை எடுத்துக் கொண்ட இட அளவு 16.9 எம்.பி. எடுத்துக் கொண்ட நேரம் 9 நிமிடங்களே. இணையத்திற்கு அப்லோட் செய்து மாற்றியிருந்தால், நிச்சயம் அதிக நேரம் ஆகி இருக்கும். அடிக்கடி போட்டோக்களைக் கையாள்பவர்கள் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம்.

நன்றி கம்ப்யூட்டர் மலர் 

Read more...

இணைய வழி கோரிக்கை பதிவு

Monday, November 21, 2011

 இனி கலெக்டர் ஆபீஸ் சென்று கால் கடுக்க நின்று மனு கொடுக்கும்  நிலைமை மாறிவிட்டது. உங்களுக்காகவே ஆன்லைனில் மனு கொடுக்கும் நிலைமை வந்துவிட்டது

பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இரண்டற கலந்த ஒன்று. உண்மையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பொது மக்களின் குறை தீர்ப்பு என்பது ஒரு மாவட்ட நிர்வாகத்தின் திறமையான செயல்பாடுகளை அளந்து நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக கருதப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு பள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வும் எளிதாகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்கிறது. கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.

டாக்டர். சந்தோஷ் பாபு இ.ஆ.ப. முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 04.12.2006 அன்று ஆரம்பித்த இந்த மென்பொருள் மெருகூட்டப்பட்டு புதிய பரிமாணங்களுடன் மின்மாவட்ட நடைமுறையின் கீழ் அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது.


இணையதளம்

 
 இந்த இணையதளத்துக்கு சென்று அந்த விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .நடவடிக்கை நிலவரம் உங்களுக்கும் தெரிவிக்கப்படும் .காலதாமதமானால் உங்கள் விண்ணப்பத்தின் நிலையும் அறிய முடியும்.



விண்ணப்பத்தில் அம்புக்குறி இடப்பட்ட அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் .

Read more...

சென்ற ஆண்டின் (2010) டாப் டென் புரோகிராம்கள்

Thursday, November 17, 2011

சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. 
இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன் கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே!
 

1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free edition): இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செயல்பாடு பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது. இன்னும் தொடர்கிறது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இந்த தளத்திலிருந்து டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 8,43,17,112. கிடைக்கும் தள முகவரி http://download.cnet.com/AVGAntiVirusFreeEdition2011/30002239_410320142.html
 

2.அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் (Avast Free Anti Virus): 5,26,48,408 முறை டவுண்லோட் செய்யப்பட்ட வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/AvastFreeAntivirus/30002239_410019223.html
 

3. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal): இதுவும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் புரோகிராம். இது 4,21,65,868 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி : http://download.cnet.com/AviraAntiVirPersonalFreeAntivirus/30002239_410322935.html
 

4.யு-ட்யூப் டவுண்லோடர்(YouTubeDownloader): அனைவரும் ரசிக்கும் யு-ட்யூப் வீடியோ படங்களைக் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருவதில் பல புரோகிராம்கள் இருந்தாலும், இந்த புரோகிராமினைப் பலரும் விரும்பி டவுண்லோட் செய்துள்ளனர். எண்ணிக்கை: 3,00,68,100. செல்ல வேண்டிய தள முகவரி : http://download.cnet.com/YouTubeDownloader/ 30002071_410647340.html
 

5. மால்வேர் பைட்ஸ் (Malwarebytes AntiMalware): மால்வேர் தொகுப்புகளுக்கு எதிரான இந்த புரோகிராம் 2,57,99,006 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/ MalwarebytesAntiMalware/30008022_410804572.html
 

6. ஆட் அவேர் பிரி இன்டர்நெட் செக்யூரிட்டி (AdAware Free Internet Security): விளம்பரங்களாக வந்து நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை விலை பேசும் புரோகிராம்களைத் தடுக்கும் புரோகிராம். இது 2,03,75,957 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைத் தரவிறக்கம் செய்திடச் செல்ல வேண்டிய முகவரி: http://download.cnet.com/AdAwareFreeInternetSecurity/30008022_410045910.html
 

7.அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் பிரி (Advanced SystemCare Free) சிஸ்டம் சரியாக இயங்க பாதுகாப்பு தரும் புரோகிராம். இது 1,95,44,950 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் முகவரி : http://download. cnet.com/AdvancedSystemCareFree/30002086_410407614.html
 

8.விண் ஆர்.ஏ.ஆர். ( (Win RAR): பைல்களைச் சுருக்கித் தரும் புரோகிராம். இது சிநெட் தளத்திலிருந்து 1,94,31,244 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. பெறுவதற்குச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://download.cnet.com/WinRAR32bit/30002250_410007677.html
 

9.டீம் வியூவர் (Team Viewer): இந்த புரோகிராம் மூலம் நீங்கள் அனுமதி அளிக்கும் இன்னொரு கம்ப்யூட்டரில் எவ்வளவு தூரத்திலிருந்தும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதனை இயக்கவும் செய்திடலாம். 1,57,22,955 முறை இது டவுண்லோட் செய்யப் பட்டுள்ளது. இதனைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://download.cnet.com/ TeamViewer/30007240_410398150.html
 


10.கேம் பிராக் வீடியோ சேட் (Camfrog Video Chat): இந்த புரோகிராம் வீடியோ மூலம் தொடர்பு கொள்ள உதவிடுகிறது. இது 14155432 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://download.cnet.com/CamfrogVideoChat/30002348_410265538.html
 

மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தும், தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இணைய தள இதழின் பக்கங்களில் இருந்து டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இவை தவிர, இந்த புரோகிராம்களை வழங்குபவர்களின் இணைய தளம் மற்றும் பிற தளங்களிலிருந்தும் இவை டவுண்லோட் செய்யப்பட்டிருக்கலாம்.

Read more...

நோட்பேட் ட்ரிக்ஸ்

Tuesday, November 15, 2011

நோட்பேடில் Bush Hid The Facts டைப் செய்து Save விட்டு அதன் பின் அதனை திறந்து பார்க்கவும். இப்போது அந்த Words எல்லாம் மறைந்து இருக்கும்.இந்த Words மட்டுமல்ல (4 3 3 5) என்ற தொடரில் வரும் அனைத்துமே.


நோட்பேடில் .LOG டைப் செய்து  Save விட்டு  பின் அதனை திறந்து பார்க்கவும். இப்போது அதில் நீங்கள் திறந்த நேரம் தெரியும்.


START என மூன்று முறை டைப் செய்து விட்டு  அதனை gg.bat என்று Save செய்யவும்.இப்போது உங்களுக்கு மூன்று முறை Command Prompt Open ஆகி இருக்கும்.START என்பதை எத்தனை முறை கொடுக்கிறோமோ அத்தனை முறை Command Prompt Open ஆகி வரும்

Read more...

பைல்களின் வகைகள்

Saturday, November 12, 2011

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
 
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
 
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.
 
.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம் கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
 
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப் பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
 
சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

Read more...

புதியதலைமுறை

நாம் நனையாத மழைகள் எல்லாம்
அழகாகவே இருக்கின்றன
#புதியதலைமுறை

Read more...

ராகிங்

Saturday, November 5, 2011

கல்லுரி மாணவ - மாணவியர்களுக்காக
ராகிங் தொடர்பாக புகார் செய்ய 24/7 டோல் ப்ரீ
ஆண்ட்டி ராகிங் ஹெல்ப் லைன்
1800-180-5522 அல்லது  155222 க்கு டயல் செய்யவும்

Read more...

பஸ் டிக்கெட்

இப்போது பஸ் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்யும் வசதி கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
இணையதள முகவரி http://www.tnstc.in/

Read more...

புதியதலைமுறை

வாய்ப்புகள் வெற்றியாளர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும்
#புதியதலைமுறை

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP