வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்

Monday, December 19, 2011

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).
Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace).
Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.
Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.
Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க
Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.
Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.
Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save).
Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க.
Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.
Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.
Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.
Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.
Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.
Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.

Read more...

இலவச பி.டி.எப். புரோகிராம்கள்

Monday, December 12, 2011

அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDF Portable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஆறு புரோகிராம்களை இங்கு காணலாம்.
பி.டி.எப். பார்மட், பல ஆண்டுகளுக்கு முன்பு, அடோப் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், பார்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப். பார்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது. டெக்ஸ்ட், இமேஜ், மல்ட்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப். பார்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்வேர்ட் கொண்டு ஒரு பி.டி.எப். பைலை பாதுகாக்கலாம். எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலைக் காண முடியும். இந்த பைல்களைக் காட்டி எடிட் செய்திட வழி தரும் ஆறு இலவச புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. பி.டி.எப். எடிட் (PDF Edit)
: இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் பைலை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது. இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் (GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களை யும் மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயக்கலாம். இதனைப் பெற http://sourceforge.net/projects/pdfedit என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

2. ஓப்பன் ஆபீஸ் (Open Office): பி.டி.எப். எடிட்டிங் புரோகிராம்கள் குறித்துக் காண்கையில் ஓப்பன் ஆபீஸ் புரோகிராமினையும் இணைத்துப் பார்க்கலாம். Writer, Calc, Impress, Draw, Base and Math என இதில் ஆறு வகை வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் ரைட்டர் டூல் மூலமாக டாகுமெண்ட்களை உருவாக்கி, பி.டி.எப். பார்மட்டிற்குக் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பி.டி.எப். பைல் களை எடிட் செய்திட முடியாது. இதில் சில ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டு வந்து மற்ற வசதிகளையும் மேற்கொள்ளலாம்.
இணையத்தில் செயல்படும் எடிட்டர்கள்: சில பி.டி.எப். எடிட்டர்களை இணைய இணைப்பில் இயக்கி, டாகுமெண்ட் களைத் தயார் செய்திடலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

3. பி.டி.எப். வியூ (PDFVue): தற்போது சோதனைப் பதிப்பாக நமக்கு இணைய வெளியில் கிடைக்கும் பி.டி.எப். எடிட்டர் இது. இதனை https://docq.com/landing/pdfvue என்னும் முகவரியில் பெறலாம். தற்போது ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டை படிப்பது, கமெண்ட் எழுதுவது, குறிப்புகளை இணைப்பது, பக்கங்களை நீக்குவது அல்லது மாற்றுவது, நிரப்ப வேண்டிய டிஜிட்டல் படிவங்களை இணைப்பது போன்ற செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்கள் மூலம் இதனை அணுகிப் பெறலாம். பி.டி.எப். டாகுமெண்ட்களை நேரடியாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். இதில் உருவாக்கப்படும் எந்த ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டையும் டவுண்லோட் செய்து பிற பி.டி.எப். எடிட்டர்களில் படிக்கலாம். இந்த எடிட்டருடன் கிடைக்கும் deskPDF என்ற புரோகிராம் மூலம், அச்சிடக் கூடிய எந்த ஒரு பைலையும் இதற்கு அப்லோட் செய்து அதனை பி.டி.எப். பைலாக அச்சிட மாற்றலாம்.

4. பி.டி.எப். எஸ்கேப் (PDFescape): http://www.pdfescape.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராமில் ரீடர், எடிட்டர், பில்லர், டிசைனர் மற்றும் அன்னோடேட்டர் (eader, editor, filler, designer, and annotator) ஆகியவை தரப்படுகின்றன. இதன் மூலம் டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை இணைக்கலாம். இங்கு உருவாக்கப்படும் பி.டி.எப். பைல்களை, அனுமதி பெறாதவர்கள் படிக்க இயலாதபடி என்கிரிப்ட் செய்திடலாம்; பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஜாவா ஸ்கிரிப்டில் இயங்கும் எந்த பிரவுசர் மூலமாகவும்(எ.கா.Internet Explorer, Firefox, Safari, Chrome மற்றும் Opera) இதனை இணையத்தில் இருந்தபடியே இயக்கலாம்.

5. எக்ஸ்பர்ட் பி.டி.எப். எடிட்டர் (Expert PDF Editor): இந்த பி.டி.எப். எடிட்டர் ஏறத்தாழ மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதனால், இதில் இயங்குவது மிக எளிதாகவும் மனதிற்கு நிறைவாகவும் உள்ளது. இதில் பி.டி.எப். டாகுமெண்ட்களை படிக்கலாம், திருத்தலாம் மற்றும் அச்சிடலாம். பி.டி.எப். பைலுடன் அதன் உறுதித் தன்மையை அமைத்திட டிஜிட்டல் சர்டிபிகேட் இணைக்கலாம். பல பைல்களை ஒன்றாக்கலாம்; வெட்டி, ஒட்டி புதிய பைலாக இணைக்கலாம். இதன் எளிய தொகுப்பினை சோதனைத் தொகுப்பாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கூடுதலாக, மேம்பட்ட வசதிகள் வேண்டும் எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். இந்த எடிட்டர் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.visagesoft.com /products/pdfeditor
பொதுவாக பி.டி.எப். டாகுமெண்ட்கள் பதிப்பிக்க மற்றும் அச்சிடும் நோக்கங்களுடன் உருவாக்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட பி.டி.எப். புரோகிராம்கள் அனைத்துமே இவற்றிற்கும் மேலாக நமக்குப் பணியாற்றுகின்றன. இவற்றிலிருந்து எது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயலாற்றுகிறதோ அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத் தலாம்.

Read more...

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்!


தமிழ் திரையுலகமே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினிக்கு இன்று வயது 62. தமிழக மக்களை மயக்கியதில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், ஸ்டைலில் சூப்பர் மேன் என சொல்லி கொண்டே போகலாம்.

அவரை பற்றிய சில தகவல் துளிகள் :

* 'எவன் ஒருவனும் ஒன்றை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!

* உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

* தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

* ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

* 25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்கு, தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

* 'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?' -1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

 
* இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

* மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

* திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

* 'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

* ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர்களின் வரலாறு தொடர்பான புத்தகங்களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

* கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி, பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

* ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone, whereas my problem is stomach'

* ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

* 'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

* ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

* ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

* ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

* ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏ.வி.எம். தயாரிப்பு!

* பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

* இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

* ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

* ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

* பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

* அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

* தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

* யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

* 'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

* ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம் கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

* ரஜினி ஷூ போடுவதை விரும்புவது இல்லை. ஷூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே ஷூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

* தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

* ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

* எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

* டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

 

* பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

* கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

* முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

* ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

* 'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

* சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!

* எனது ரோல் மாடல் அமிதாப் மட்டுமே என்பார் ரஜினி

நன்றி விகடன் 

Read more...

வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்பு

Monday, December 5, 2011

CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்க
CTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
CTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
CTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
CTRL+ALT+V: சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
CTRL+SHIFT+< : எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+SHIFT+>: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+[: எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+]: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+HYPHEN: இடையே உடையாத ஹைபன் அமைக்க
CTRL+SPACEBAR : பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
CTRL+SHIFT+V:பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட
CTRL+Y: இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
CTRL+SHIFT+G: சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
CTRL+L: திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+E: திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+R: திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+M: பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
CTRL +1: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
CTRL +5: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
CTRL +2: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
F7: : ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
SHIFT+F7: தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
CTRL+SPACE: ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்
 நன்றி கம்ப்யூட்டர் மலர்

Read more...

போட்டோக்களின் அளவுகளை மாற்ற,பைல்களின் பார்மட்களை மாற்ற

Sunday, November 27, 2011

டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது.

அதன் பெயர் Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம். இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போட்டோக்களில் ஓரளவிற்கு எடிட்டிங் வேலையையும் மேற்கொள்ளலாம்; சுழற்றி வைக்கலாம்.

மேலே குறிப்பிட்ட தளம் சென்றவுடன், அந்த இணையப் பக்கத்தில், கீழாக
Fast Stone Photo Resizer இருப்பதனைக் காணலாம். இதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளவும். டவுண்லோட் செய்தவுடன், டெஸ்க்டாப் திரையில் ஒரு ஐகான் காணப்படும். இதன் மீது கிளிக் செய்து, இந்த அப்ளிகேஷனைத் திறக்கவும். முகப்புப் பக்கத்திலேயே, நீங்கள் மாற்றம் மேற்கொள்ள விரும்பும் போட்டோ பைல்களைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும். போட்டோக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து Add பட்டன் கிளிக் செய்தால் போதும். தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், அடுத்து இந்த படங்களில் என்ன மாற்றம் செய்திட விரும்புகிறீர்கள் என்று காட்ட வேண்டும். போட்டோக்களின் அளவினை மாற்ற விரும்பினால், Advanced Options பட்டன் கிளிக் செய்து, 
Resize பாக்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மேலாக இடது புறம் காணப்படும். இதில் Standard Size என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் அளவைக் குறிப்பிடலாம். அளவு குறித்த தேர்வை அமைத்த பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்திடலாம். அடுத்து, எந்த போல்டரில் அளவு மாற்றப்பட்ட படங்கள் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனைக் காட்டவேண்டும்.
மீண்டும் Browse Click செய்தால் Browse For Folder என்ற விண்டோ திறக்கப்படும். இதில் போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும், குறிப்பிட்ட அளவில் மாற்றப்பட்டு Save செய்யப்படும். இதே போல மொத்தமாகவும் பார்மட் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

இந்த சாப்ட்வேர் புரோகிராமினைச் சோதனை செய்வதற்காக, 106 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து அளவை மாற்றினேன். முதலில் இவற்றிற்கு 250 எம்பி இடம் தேவைப்பட்டது. அளவு மாற்றியவுடன் இவை எடுத்துக் கொண்ட இட அளவு 16.9 எம்.பி. எடுத்துக் கொண்ட நேரம் 9 நிமிடங்களே. இணையத்திற்கு அப்லோட் செய்து மாற்றியிருந்தால், நிச்சயம் அதிக நேரம் ஆகி இருக்கும். அடிக்கடி போட்டோக்களைக் கையாள்பவர்கள் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம்.

நன்றி கம்ப்யூட்டர் மலர் 

Read more...

இணைய வழி கோரிக்கை பதிவு

Monday, November 21, 2011

 இனி கலெக்டர் ஆபீஸ் சென்று கால் கடுக்க நின்று மனு கொடுக்கும்  நிலைமை மாறிவிட்டது. உங்களுக்காகவே ஆன்லைனில் மனு கொடுக்கும் நிலைமை வந்துவிட்டது

பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இரண்டற கலந்த ஒன்று. உண்மையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பொது மக்களின் குறை தீர்ப்பு என்பது ஒரு மாவட்ட நிர்வாகத்தின் திறமையான செயல்பாடுகளை அளந்து நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக கருதப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு பள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வும் எளிதாகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்கிறது. கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.

டாக்டர். சந்தோஷ் பாபு இ.ஆ.ப. முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 04.12.2006 அன்று ஆரம்பித்த இந்த மென்பொருள் மெருகூட்டப்பட்டு புதிய பரிமாணங்களுடன் மின்மாவட்ட நடைமுறையின் கீழ் அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது.


இணையதளம்

 
 இந்த இணையதளத்துக்கு சென்று அந்த விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .நடவடிக்கை நிலவரம் உங்களுக்கும் தெரிவிக்கப்படும் .காலதாமதமானால் உங்கள் விண்ணப்பத்தின் நிலையும் அறிய முடியும்.



விண்ணப்பத்தில் அம்புக்குறி இடப்பட்ட அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் .

Read more...

சென்ற ஆண்டின் (2010) டாப் டென் புரோகிராம்கள்

Thursday, November 17, 2011

சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. 
இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன் கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே!
 

1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free edition): இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செயல்பாடு பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது. இன்னும் தொடர்கிறது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இந்த தளத்திலிருந்து டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 8,43,17,112. கிடைக்கும் தள முகவரி http://download.cnet.com/AVGAntiVirusFreeEdition2011/30002239_410320142.html
 

2.அவாஸ்ட் இலவச ஆண்ட்டி வைரஸ் (Avast Free Anti Virus): 5,26,48,408 முறை டவுண்லோட் செய்யப்பட்ட வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/AvastFreeAntivirus/30002239_410019223.html
 

3. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal): இதுவும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் புரோகிராம். இது 4,21,65,868 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி : http://download.cnet.com/AviraAntiVirPersonalFreeAntivirus/30002239_410322935.html
 

4.யு-ட்யூப் டவுண்லோடர்(YouTubeDownloader): அனைவரும் ரசிக்கும் யு-ட்யூப் வீடியோ படங்களைக் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருவதில் பல புரோகிராம்கள் இருந்தாலும், இந்த புரோகிராமினைப் பலரும் விரும்பி டவுண்லோட் செய்துள்ளனர். எண்ணிக்கை: 3,00,68,100. செல்ல வேண்டிய தள முகவரி : http://download.cnet.com/YouTubeDownloader/ 30002071_410647340.html
 

5. மால்வேர் பைட்ஸ் (Malwarebytes AntiMalware): மால்வேர் தொகுப்புகளுக்கு எதிரான இந்த புரோகிராம் 2,57,99,006 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் தள முகவரி: http://download.cnet.com/ MalwarebytesAntiMalware/30008022_410804572.html
 

6. ஆட் அவேர் பிரி இன்டர்நெட் செக்யூரிட்டி (AdAware Free Internet Security): விளம்பரங்களாக வந்து நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை விலை பேசும் புரோகிராம்களைத் தடுக்கும் புரோகிராம். இது 2,03,75,957 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைத் தரவிறக்கம் செய்திடச் செல்ல வேண்டிய முகவரி: http://download.cnet.com/AdAwareFreeInternetSecurity/30008022_410045910.html
 

7.அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் பிரி (Advanced SystemCare Free) சிஸ்டம் சரியாக இயங்க பாதுகாப்பு தரும் புரோகிராம். இது 1,95,44,950 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. கிடைக்கும் முகவரி : http://download. cnet.com/AdvancedSystemCareFree/30002086_410407614.html
 

8.விண் ஆர்.ஏ.ஆர். ( (Win RAR): பைல்களைச் சுருக்கித் தரும் புரோகிராம். இது சிநெட் தளத்திலிருந்து 1,94,31,244 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. பெறுவதற்குச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://download.cnet.com/WinRAR32bit/30002250_410007677.html
 

9.டீம் வியூவர் (Team Viewer): இந்த புரோகிராம் மூலம் நீங்கள் அனுமதி அளிக்கும் இன்னொரு கம்ப்யூட்டரில் எவ்வளவு தூரத்திலிருந்தும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அதனை இயக்கவும் செய்திடலாம். 1,57,22,955 முறை இது டவுண்லோட் செய்யப் பட்டுள்ளது. இதனைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://download.cnet.com/ TeamViewer/30007240_410398150.html
 


10.கேம் பிராக் வீடியோ சேட் (Camfrog Video Chat): இந்த புரோகிராம் வீடியோ மூலம் தொடர்பு கொள்ள உதவிடுகிறது. இது 14155432 முறை டவுண்லோட் செய்யப்பட்டது. இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://download.cnet.com/CamfrogVideoChat/30002348_410265538.html
 

மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தும், தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இணைய தள இதழின் பக்கங்களில் இருந்து டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இவை தவிர, இந்த புரோகிராம்களை வழங்குபவர்களின் இணைய தளம் மற்றும் பிற தளங்களிலிருந்தும் இவை டவுண்லோட் செய்யப்பட்டிருக்கலாம்.

Read more...

நோட்பேட் ட்ரிக்ஸ்

Tuesday, November 15, 2011

நோட்பேடில் Bush Hid The Facts டைப் செய்து Save விட்டு அதன் பின் அதனை திறந்து பார்க்கவும். இப்போது அந்த Words எல்லாம் மறைந்து இருக்கும்.இந்த Words மட்டுமல்ல (4 3 3 5) என்ற தொடரில் வரும் அனைத்துமே.


நோட்பேடில் .LOG டைப் செய்து  Save விட்டு  பின் அதனை திறந்து பார்க்கவும். இப்போது அதில் நீங்கள் திறந்த நேரம் தெரியும்.


START என மூன்று முறை டைப் செய்து விட்டு  அதனை gg.bat என்று Save செய்யவும்.இப்போது உங்களுக்கு மூன்று முறை Command Prompt Open ஆகி இருக்கும்.START என்பதை எத்தனை முறை கொடுக்கிறோமோ அத்தனை முறை Command Prompt Open ஆகி வரும்

Read more...

பைல்களின் வகைகள்

Saturday, November 12, 2011

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
 
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
 
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.
 
.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.

.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம் கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
 
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப் பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
 
சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.

.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

Read more...

புதியதலைமுறை

நாம் நனையாத மழைகள் எல்லாம்
அழகாகவே இருக்கின்றன
#புதியதலைமுறை

Read more...

ராகிங்

Saturday, November 5, 2011

கல்லுரி மாணவ - மாணவியர்களுக்காக
ராகிங் தொடர்பாக புகார் செய்ய 24/7 டோல் ப்ரீ
ஆண்ட்டி ராகிங் ஹெல்ப் லைன்
1800-180-5522 அல்லது  155222 க்கு டயல் செய்யவும்

Read more...

பஸ் டிக்கெட்

இப்போது பஸ் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்யும் வசதி கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
இணையதள முகவரி http://www.tnstc.in/

Read more...

புதியதலைமுறை

வாய்ப்புகள் வெற்றியாளர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும்
#புதியதலைமுறை

Read more...

Whises

Sunday, October 23, 2011

Diwali Wishes For Friends

Read more...

புதியதலைமுறை

ஒளியகாச் சுடர்விடு ;
காற்றாகத் திரி

Read more...

புதியதலைமுறை

Wednesday, October 19, 2011

திறமை உயரத்திற்குக் கொண்டு போகும்
நல்ல குணம் தான் கிழே விழாமல் பாதுகாக்கும்
#புதியதலைமுறை

Read more...

புதியதலைமுறை

Sunday, October 9, 2011

நமது குழந்தைகளுக்கு நாம்
அவசியம் தரவேண்டிய பரிசுகள்
வேர்களும் சிறகுகளும்
# புதியதலைமுறை

Read more...

வாழ்த்துகள்

Tuesday, October 4, 2011


நண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்..

Read more...

பாஸ்போர்ட்

Sunday, October 2, 2011

திருச்சி -- பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு
0431 - 2707203,2707404,2700699


Read more...

புதியதலைமுறை

Saturday, October 1, 2011

படுத்துக் கிடப்பவனுக்கு பகல் கூட இரவுதான்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாத் திசையும் கிழக்குதான்
# புதியதலைமுறை

Read more...

படித்தவை

Sunday, August 21, 2011

கருத்துகளை யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் முடிவை நீங்கள் மட்டுமே எடுங்கள்

Read more...

படித்தவை

Sunday, August 7, 2011

வீணான விவாதங்கள் காலத்தை விரயமாக்கும்
அவசரப்பட்டால் காரியம் ஆகாது
குறைகளை விட குணங்களைப் பார்ப்பது நல்லது

Read more...

படித்தவை

மனம் தளராத முயற்சி வெற்றிகளைக்  கொடுக்கும்
சவால்களைக் கண்டு அஞ்சாதீர்கள் அவற்றை சமாளிக்கப் பழகுங்கள்

Read more...

கூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் வீடியோ செட்டிங் அறிமுகம்

Wednesday, July 6, 2011





சமூகவலையமைப்பான பேஸ்புக் எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.
பேஸ்புக் தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், ஸ்கைப் 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.
ஸ்கைப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மே மாதம் கொள்வனவு செய்திருந்தது.
இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் "கூகுள் +" என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

உங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்குவதற்கு

Tuesday, July 5, 2011



உங்களுடைய பெயரில் கூகுளின் இணையதளம் வந்தால் எப்படி இருக்கும். அந்த வசதியை ஒரு இணையதளம் நமக்கு செய்து தருகின்றது.இத்தளத்திற்கு சென்றவுடன் அதில் உள்ள Enter your Name Here என்கின்ற விண்டோவில் உங்களது பெயரை தட்டச்சு செய்யவும்.
அதன் கீழே உள்ள விண்டோவில் விதவிதமான எழுத்துருக்கள் இருக்கும். நமக்கு எந்த டிசைன் தேவையோ அந்த எழுத்தின் கீழே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்து என்டர் தட்டவும்.
சில வினாடிகளில் நமது பெயருடன் கூகுளின் இணைய தளம் ஓப்பன் ஆகும். கூகுளின் லோகோ ஸ்டைலிலும் உங்களுடைய பெயரை கொண்டு வரலாம்.
நீங்களும் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து வேண்டியவர்களுக்கு அதன் லிங்கை அனுப்பி வையுங்கள். அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்கையில் அவர்களுடைய பெயர் அங்கு கிடைக்கும்.
இதை நீங்கள் தொடக்க பக்கமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இணையதள முகவரி

Read more...

மின்னஞ்சலின் அடுத்த புரட்சி

Monday, July 4, 2011



மின்னஞ்சலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது. அத‌ன் பெயர் ஷார்ட்மெயில்.டிவிட்டரும், பேஸ்புக்கும் மின்னஞ்சலுக்கான இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் மின்னஞ்சல் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து.
அதாவது பெயருக்கேற்ப இது மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது. ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீள‌மாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது. அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விடயத்தை சொல்லி விட வேண்டும்.
டிவிட்டரில் எப்படி அதிகப‌ட்சம் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு இருக்கிற‌தோ அதே போல ஷார்ட்மெயிலில் 500 எழுத்துக்களில் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் செய்திகள் எப்போதுமே சுருக்கமாக சொல்ல வந்ததை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சேவையை இன்பாக்ஸில் வந்து குவியும் படிக்கப்படாத மின்னஞ்சல்களால் திணறிப்போகிறவர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதோடு மின்னஞ்சல் சுமை என்ப‌தும் இல்லாமல் போய்விடும்.
அது மட்டும் அல்ல மின்னஞ்சலோடு ஒட்டி கொண்டு வரும் இணைப்புகள் புகைப்ப‌டங்கள் போன்றவற்றுக்கும் இங்கு இடமில்லை. இது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும் தான்.
ஷார்ட்மெயிலை நீங்கள் பயன்படுத்த துவங்கினீர்கள் என்றால் உங்கலுக்கு வரும் மின்னஞ்சல்களும் ஷார்ட் அண்டு ஸ்வீட்டாக இருந்தாக வேண்டும். அதாவ‌து அவையும் 500 எழுத்துகளுக்குள் இல்லை என்றால் திருப்பி அனுப்பபட்டு விடும். 500 எழுத்துகளுக்குள் தொடர்பு கொள்ளுங்கள் என்னும் செய்தியோடு.
மின்னஞ்சலை எளிமையாக்க மட்டும் அல்ல அதனை சிறந்த முறையில் நிர்வ‌கிக்கவும் இது பேருதவியாக இருக்கும். எந்த மின்னஞ்சல் வந்தாலும் உடனே படித்து பார்த்து விடலாம். தள்ளிப்போடுவதோ மின்னஞ்சல்களை குப்பை போல சேரவிடுவதோ நேராது.
டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப ஷார்ட்மெயில் ரத்தின சுருக்கமாகியிருப்பதோடு சமூக வலைப்பின்னல் வசதியின் சாயலையும் கொண்டுள்ளது. ஷார்ட்மெயிலில் செய்திகளை அனுப்பும் போதே அது ரகசியமானதா அல்லது பொதுவில் பகிரக்கூடியதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.
ரகசியமானது என்றால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர் மட்டுமே பாக்க முடியும். பொது என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். பதில் அனுப்பலாம். இப்படி மின்னஞ்சல் வாயிலாகவே உரையாடலில் ஈடுபடலாம்.
பேஸ்புக் பயன்ப‌டுத்துபவர்கள் சுவர் செய்தி மூலமே நண்பர்களை தொடர்பு கொண்டுவிடுவதால் மின்னஞ்சலின் தேவையே இல்லாமல் போவதாக சொல்லபடுகிற‌து. ஷார்ட்மெயில் பிரபலமானால் இதன் மூலமே நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யமுடியும் என்ப‌தால் பேஸ்புக் தேவையில்லாமல் போகலாம்.
ஷார்ட்மெயிலில் முகவரி பெறுவதும் மிகவும் சுலபமானது. டிவிட்டர் கணக்கு வைத்திருப்பாவர்க‌ள் அதன் மூலமே புதிய முகவரி பெறலாம். ஐபோன் ஆன்டிராய்டு போன்களுக்கு ஏற்ற வடிவிலும் வருகிறது. மின்னஞ்சலை புதுப்பிக்க வந்த புதுமையான் சேவை இந்த ஷார்ட்மெயில் என்று மனதார பாராட்டலாம்.
இணையதள முகவரி

       http://shortmail.com/

Read more...

About

Followers

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP